சிட்னி டெஸ்ட் - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, பார்டர் - கவாஸ்கர் கோப்பையை நழுவ விட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் 2க்கு ஒன்று என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது.
இதனிடையே 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3க்கு ஒன்று என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா, 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரில் அபாரமாக பந்துவீசி 32 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், இந்த தோல்வியின் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.