சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு, பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நசரத்பேட்டை போலீசார், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி கடந்த ஆகஸ்டு மாதம் அவர்களை விடுதலை செய்தது.
இந்நிலையில், சித்ராவின் தந்தையும் ஓய்வுபெற்ற காவலருமான காமராஜ், சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.