சிரியாவில் ஆட்சியை கைபற்றிய கிளர்ச்சியாளர்கள்!
01:00 PM Dec 09, 2024 IST
|
Murugesan M
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைபற்றிய நிலையில், அதிபர் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தனர்.
Advertisement
சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடைபெற்று வந்த சூழலில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் இருந்து தப்பியோடினர்.
தொடர்ந்து டமாஸ்கஸ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், பாதுகாப்பு தேடி அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் ரஷியா தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்தனர்.
Advertisement
அவர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் ரஷ்யா புகலிடம் அளித்துள்ள நிலையில், ஐநாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Advertisement
Next Article