சிறு குரலாக இருந்த தம்மை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி - ஜாமினில் வெளியே வந்த நடிகை கஸ்தூரி பேட்டி!
10:18 AM Nov 22, 2024 IST | Murugesan M
சிறு குரலாக இருந்த தன்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என, சிறையில் இருந்த வெளியே வந்த நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு, மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
அப்போது பேட்டியளித்த நடிகை கஸ்தூரி, தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறு குரலாக இருந்த தம்மை சீறும் புயலாக மாற்றியவர்களுக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement