For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சீனாவை சமாளிக்க தயார்! : லடாக்கில் புதிய வியூகங்கள் இந்திய ராணுவம் அதிரடி!

08:45 PM Jan 14, 2025 IST | Murugesan M
சீனாவை சமாளிக்க தயார்    லடாக்கில் புதிய வியூகங்கள் இந்திய ராணுவம் அதிரடி

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்தியா, தனது போர் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், லடாக்கில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்களில், 11 பாதுகாப்பு உள்கட்டமைப்பு திட்டங்களுக்குத் தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL) அனுமதி அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சீன துருப்புகளுடனான கால்வான் மோதலுக்குப் பிறகு சீன- இந்திய எல்லை பதற்றம் அதிகரித்தது. அப்போது இருந்து, லடாக்கில் ராணுவ உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Advertisement

நாட்டின் எல்லை பகுதி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பல்வேறு தரப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்திய ராணுவத்தால் முன்மொழியப்பட்டன.

இந்தத் திட்டங்கள் உணர்திறன் வாய்ந்த வனவிலங்குப் பகுதிகளுக்குள் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட ராணுவத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Advertisement

தரைப் படை இராணுவ முகாம்கள் மற்றும் பீரங்கி படைப்பிரிவு முகாம்கள் அமைப்பது, இராணுவ சிக்னல்கள், மொபைல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவுவது, படகு கொட்டகை பகுதிகள் அமைப்பது, வெடிமருந்து சேமிப்பு வசதிகளை உருவாக்குவது மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு முகாம்கள் அமைப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

சுற்றுச்சூழல் தாக்கங்களைச் சமாளிக்க ஹான்லே கிராமத்தில் கழிவுகளை அகற்றும் மற்றும் பதப்படுத்தும் ஆலையை நிறுவுவதும் இந்த திட்டங்களில் ஒன்றாகும்.

தேசியப் பாதுகாப்புக்கு இந்தத் திட்டங்கள் மிக முக்கியமானவை என்றாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கான நிபந்தனைகளை தேசிய வனவிலங்கு வாரியம் வகுத்துள்ளது.

பனிச்சிறுத்தைகள், திபெத்திய மான்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவை இனங்கள் போன்ற அரிய வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, நாட்டின் பாதுகாப்புக்கான 11 ராணுவ உள்கட்டமைப்பு திட்டங்களை அங்கீகரித்தது.

மேலும், உள்ளூர் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

சாங்தாங் உயர் உயர குளிர் பாலைவன வனவிலங்கு சரணாலயத்தில் 10 திட்டங்களும், துர்டுக் ஜங்பாலில் உள்ள கரகோரம் நுப்ரா ஷியோக் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு திட்டமும் அமைக்கப் பட உள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கும், வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கும் இடையிலான தற்போதைய சமநிலையை இந்த ராணுவ உள் கட்டமைப்பு திட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எல்லைப் பகுதிகளில் ராணுவ உள்கட்டமைப்பு மேம்பாடு தேசத்துக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், நீண்டகால சவால்களுக்கும் பதிலடி கொடுக்க தயார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Advertisement
Tags :
Advertisement