சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் ஜோடி!
சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் நாட்டு மணமக்களுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த காரைமேடு பகுதியில் உள்ள ஒளிலாயம் சித்தர்பீடத்தில் 18 சித்தர்களும் தனித்தனியாக அருள்பாலித்து வருகின்றனர். இங்கு பௌர்ணமி தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இ-மிங், சு-ஹூவா ஜோடி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து இந்து முறைப்படி மணம் முடித்தனர். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நட்டிலிருந்து வந்திருந்த உறவினர்களும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுபடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.