சுனிதா வில்லியம்ஸ் இன்று விண்வெளி பயணம்!
01:04 PM Jun 01, 2024 IST | Murugesan M
நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குப் பயணிக்கிறார்.
அவருடன் பேரி பட்ச் வில்மோர் என்ற நாசா விஞ்ஞானியும் பயணிக்கிறார். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட்டில் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கின்றனர்.
Advertisement
ஒரு வாரம் விண்வெளியில் தங்கியிருப்பர் என்று நாசா அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக விண்வெளிக்குச் செல்லும் சுனிதா வில்லியம்ஸ், இதுவரை 321 நாட்களை விண்ணில் கழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement