சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப மேலும் ஒரு மாதம் ஆகலாம் - நாசா தகவல்!
04:52 PM Dec 19, 2024 IST | Murugesan M
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.
Advertisement
ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். பிப்ரவரியில் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா கூறியுள்ளது.
Advertisement
Advertisement