சுமார் 200 ஆண்டுகளாக அடிமைத்தனத்தை எதிர்கொண்ட கயானா, இந்தியா - பிரதமர் மோடி பேச்சு!
10:13 AM Nov 22, 2024 IST | Murugesan M
அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, ஜனநாயகத்தை காட்டிலும் சிறந்த மார்க்கம் எதுவும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நைஜீரியா, பிரேசில் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இறுதியாக தென்னமெரிக்க நாடான கயானாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவும், கயானாவும் ஜனநாயகத்தை பெயரளவில் மட்டுமல்லாமல், தங்களது டிஎன்ஏ-வாக கொண்டுள்ளதாக கூறினார்.
Advertisement
வளர்ச்சியின் பாதையில் செல்ல ஜனநாயகத்தையும், மனிதநேயத்தையும் முதன்மையாக கொண்டு பயணிக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இரு நாடுகளும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைத்தனத்தை எதிர்கொண்டதாக கூறினார். மேலும், உலகளவில் இந்தியாவும், கயானாவும் ஜனநாயகத்தை வலுப்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
Advertisement
Advertisement