For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சூரியனை ஆராய 2 செயற்கைகோள்கள் - இஸ்ரோ மீண்டும் சாதனை - சிறப்பு கட்டுரை!

08:00 PM Dec 03, 2024 IST | Murugesan M
சூரியனை ஆராய 2 செயற்கைகோள்கள்   இஸ்ரோ மீண்டும் சாதனை   சிறப்பு கட்டுரை

செலவு குறைந்த மற்றும் நம்பகமான விண்வெளிப் பயணங்களுக்கான சர்வதேச மையமாக இந்தியா மாறி வருகிறது. அதன் ஒரு மைல்கல்லாக,  டிசம்பர் 4ம் தேதி, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Proba-3 திட்டத்தை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2001 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Proba-1, Proba-2 செயற்கைக்கோள்கள், இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

Advertisement

அதன் தொடர்ச்சியாக, தற்போது Proba-3யை இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ வரும் டிசம்பர் 4ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சொந்த கனரக ராக்கெட்டுகளுக்கு மாற்றாக இஸ்ரோவின் PSLV ஏவு வாகனத்தின் மூலம் Proba-3 விண்ணில் செலுத்தப் 0பட உள்ளது.

Proba-3 என்பது ஸ்பெயின், பெல்ஜியம், போலந்து, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுத் திட்டமாகும்

Advertisement

200 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்ட இந்த பணி இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கால கட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 செயற்கை சூரிய கிரகணங்களை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும் வகையில் செயல் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

200 கிலோ எடையுள்ள ஆக்ல்டர் செயற்கை கோள் மற்றும் 340 கிலோ எடையுள்ள கரோனாகிராப் செயற்கை கோள் என இரண்டு செயற்கை கோள்களை உள்ளடக்கியதாகும் .

துல்லியமான ஒருங்கிணைந்து செயல்படும் இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, சூரிய கரோனாகிராஃப் உருவாக்க ஒன்றாக நிலைநிறுத்தப்படுகிறது.

Proba-3 பூமியில் இருந்து 600 முதல் 60,530 கிலோமீட்டர் உயரத்தில் 19.7 மணி நேர சுற்றுப்பாதை காலத்துடன் அதிக நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப் படுகிறது

சூரியனின் கரோனாவை ஆய்வு செய்வது Proba-3 திட்டத்தின் முதன்மையான குறிக்கோள் ஆகும். இது 2 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வரை அடையக்கூடிய அதன் தீவிர வெப்பநிலையை ஆய்வு செய்ய இருக்கிறது.

சூரியனின் இந்த சூரிய புயல்கள் மற்றும் சூரிய காற்று போன்ற விண்வெளி வானிலை நிகழ்வுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் பூமியின் மின் கட்டங்களை சீர்குலைக்கும் சூரியனின் கரோனாவை ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும்.

சூரியனின் அதீத பிரகாசம் காரணமாக பாரம்பரியமான அறிவியல் கருவிகளால் சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய முடியாமல் போகின்றன.

ஆனால் இந்த சவாலை சமாளிக்க Proba-3 ல் மூன்று சிறப்பு கருவிகள் உள்ளன. முதல் கருவி சூரியனின் தீவிர ஒளியைத் தடுக்க 1.4-மீட்டர் அளவிலான வட்டை போன்றது. இது கரோனாவை நெருக்கமாக ஆய்வு செய்ய உதவுகிறது.

இரண்டாவது கருவி டிஜிட்டல் அப்சலூட் ரேடியோமீட்டர் தாரா என்பதாகும். இந்தக் கருவியானது சூரியனின் மொத்த ஆற்றல் வெளியீட்டைத் தொடர்ந்து அளக்கவும், மொத்த சூரிய கதிர்வீச்சு பற்றிய தரவுகளைச் சேகரிக்க உதவுகிறது.

மூன்றாவது கருவி 3D எனர்ஜிடிக் எலக்ட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும். இது சூரியனின் ஒளி பூமியின் மீது பட்டைகள் வழியாக செல்லும் போது எலக்ட்ரான் ஃப்ளக்ஸ்களை அளக்க உதவுகிறது.

கரோனாகிராஃப் செயற்கை கோள், ஆக்ல்டர் செயற்கைக்கோளின் நிழலில் நிலைநிறுத்தப்பட்ட தொலைநோக்கி போல விண்ணில் செயல்படும் . இது சூரியனின் கரோனா மற்றும் பிற அம்சங்களைக் துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பும்.

Proba-3 இந்திய விண்வெளி துறையின் உயர்தொழில்நுட்ப மைல்கல் ஆகும். மேலும் இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்த பணியை தொடங்குவதன் மூலம், உலகளாவிய விண்வெளி ஆய்வில் நம்பகமான மற்றும் செலவு குறைந்த பங்காளியாக இஸ்ரோ தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

Advertisement
Tags :
Advertisement