சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் - 5 பேர் படுகாயம்!
04:15 PM Dec 20, 2024 IST | Murugesan M
சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்தனர். கையில் கத்தியுடன் திரிந்த இளைஞர்கள் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினர்.
Advertisement
பின்னர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் நவீன், மைதீன், தனசேகரன், மகேந்திர குமார், தீபக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
அப்போது நித்திவேல், லோகேஷ், மணிகண்டன் ஆகிய 3 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.
Advertisement