சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு!
புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் 7-வது தெருவை சேர்ந்த ராஜனுக்கும் அவருடன் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்த மாதவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ராஜன் அண்ணா நகர் வேலன் சத்திரம் அருகே உள்ள மதுபானக் கூடம் ஒன்றில் மது அருந்தியபோது அங்கு வந்த மாதவன், தகராறில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக கொருக்குப்பேட்டை ரயில்வே காலனியைச் சேர்ந்த பொங்கல் என்ற அருண்குமார் வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து ராஜனை தாக்கியதால், காயமடைந்த ராஜன், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த போலீஸாரை கண்டித்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜன், ஜார்ஜ் டவுன் 15-வது நீதித்துறை நடுவரிடம், மரண வாக்குமூலம் அளித்தார். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜன் தற்கொலைக்கு காரணமான அருண்குமார், மாதவனை போலீஸார் கைது செய்தனர்.