செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்து செல்லுங்கள் - பெற்றோர்களுக்கு அண்ணாமலை அழைப்பு!

09:50 AM Jan 08, 2025 IST | Murugesan M

சென்னை புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்து செல்லுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  பெற்றோர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் இனிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.  ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பல துறைகள் சார்ந்த பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும். எனவே, அனைவரும், சென்னை புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Advertisement

மேலும் பிரதமர்  பகிர்ந்த கதைகளால் ஈர்க்கப்பட்ட அமர் சித்ர கதாவின் சிறப்பு 12-காமிக் தொடரை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஒவ்வொரு புத்தகமும் பாடப்படாத ஹீரோக்களின் கதைகளையும், நம் தேசத்தின் பலதரப்பட்ட அழகையும் படம் பிடித்துக் காட்டுகிறது" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Amar Chitra Katha’s specialcomic seriesannamalaichennai book fairFEATUREDMAINNarendraModitamilnadu bjp president
Advertisement
Next Article