சென்னை புத்தக கண்காட்சி டிச.27-ம் தேதி தொடக்கம்! - பபாசி
சென்னையில் 48வது புத்தக கண்காட்சி வரும் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், 48-வது புத்தக கண்காட்சி வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக பபாசி சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிசம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ள சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 12-ம் தேதி வரை, 17 நாட்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழக அரசு மாவட்ட வாரியாக புத்தக கண்காட்சிகளை நடத்துவதால் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறினர்.
கடந்த ஆண்டு நடந்த புத்தக கண்காட்சியில் 20 லட்சம் வாசகர்களின் வருகை பதிவு செய்யப்பட்டதாகவும், 20 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.