சென்னை, மும்பை ஐஐடி சான்று பெற்று பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது - தெற்கு ரயில்வே விளக்கம்!
10:25 AM Nov 29, 2024 IST | Murugesan M
சென்னை மற்றும் மும்பை ஐஐடி-யின் சான்று பெற்ற பிறகே பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலம் தரமற்ற முறையில் இருப்பதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள தெற்கு ரயில்வே, வடிவமைப்பு சான்றை முழுமையாக சரிபார்த்த பிறகே பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும், சென்னை மற்றும் மும்பை ஐஐடி-யின் சான்று பெற்றே பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டது என விளக்கமளித்துள்ள தெற்கு ரயில்வே, புகழ்பெற்ற சர்வதேச கட்டுமான ஆலோசகரின் ஆலோசனையுடன் தான் பாம்பன் பாலம் கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement