செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகளை இணைக்க இலக்கு - அண்ணாமலை உறுதி!
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில், முன்னாள் பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின விழா நடைபெற்றது. அப்பாேது, தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஒரு லட்சம் பெண் குழந்தைகளை செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அடல் பிகாரி வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பின்னர் பேசினார்.
அப்போது, 10 வயதிற்கு உட்பட்ட ஒரு லட்சம் பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகளை பட்டியலிட்டார்.