சேதமடைந்த தரைப்பாலம் : சிரமத்திற்கு மத்தியில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் நிலை!
05:06 PM Jan 20, 2025 IST
|
Murugesan M
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தரைப்பாலம் சேதமடைந்ததால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இறந்தவரின் உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர்.
Advertisement
குதிரையாறு அணைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது உடலை தரைப்பாலத்தை கடந்து சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக சுடுகாடு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்தது. இதற்கிடையே, அந்த கிராமத்தை சேர்ந்த கச்சம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், தரைப்பாலம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவரது உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர்.
Advertisement
Advertisement
Next Article