சேலம் அருகே வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் - பத்திரமாக மீட்பு!
03:47 PM Dec 03, 2024 IST
|
Murugesan M
சேலம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் சிக்கிய பெண்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டனர்.
Advertisement
சேலத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே கந்தம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 5 பெண்கள் வீட்டில் சிக்கித் தவித்தனர். தகவலறிந்து அங்குவந்த மாநகராட்சி ஊழியர்கள், பெண்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article