ஜனவரி 6-இல் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு தகவல்!
03:27 PM Dec 20, 2024 IST | Murugesan M
ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
Advertisement
கூட்டத்தொடரை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தவேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும், குறைந்த நாட்கள் கூட்டத்தொடர் நடந்தாலும் மக்கள் பணிகளில் குறையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement