ஜனவரி 8-இல் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஆலோசனை - நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிவிப்பு!
06:30 PM Dec 24, 2024 IST | Murugesan M
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஜனவரி 8-ம் தேதியன்று ஆலோசனை நடைபெறும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா கடந்த 17ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கலானது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
Advertisement
இந்த நிலையில், மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அடுத்த மாதம் 8-ம் தேதி கூடி இதுபற்றி விவாதிக்கிறது.
Advertisement
Advertisement