For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்! : ஆளுங்கட்சி பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல்!

11:12 AM Oct 29, 2024 IST | Murugesan M
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்    ஆளுங்கட்சி பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல்

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில்,
ஆட்சியமைக்க பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தோ்ந்தெடுப்பதற்காக ஜப்பானில் கடந்த 27-ம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளனர்.

Advertisement

மொத்தமுள்ள 465 இடங்களில் லிபரல் ஜனநாயகக் கூட்டணி 215 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை என்ற நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி 148 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த தேர்தலில் பெற்ற 98 இடங்களை விட கூடுதலாக 50 இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றது. இது, பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆட்சியமைக்க கூட்டணிக்கு வெளியே பிற கட்சிகளின் ஆதரவைத் தேடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement
Tags :
Advertisement