For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜாகிர் ஹுசைன் மறைவு! - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

02:31 PM Dec 16, 2024 IST | Murugesan M
ஜாகிர் ஹுசைன் மறைவு    பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த புகழ் பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் (73) சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததார். இவரது மறைவுக்கு இசையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

Advertisement

"புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார். அவர் தபேலா இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமது இணையற்ற இசையால் லட்சக்கணக்கானவர்களை கவர்ந்தார். இதன் மூலம், அவர் இந்திய பாரம்பரிய மரபுகளை உலகளாவிய இசையுடன் இணைத்தார். இதனால் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக அவர் திகழ்ந்தார்.

அவரது தனித்துவமிக்க நிகழ்ச்சிகள், ஆத்மார்த்தமான பாடல்கள் தலைமுறை இசைக்கலைஞர்கள், இசை ஆர்வலர்களை ஊக்குவிக்க பங்களிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உலக இசை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement