ஜார்கண்ட் ஆளுநருடன் சந்திப்பு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஜார்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி 43 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்ட நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டி கூட்டணி 56 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34, காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்களை பெற்றன.
இந்நிலையில் ஜேஎம்எம் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்க்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த் சோரன், வரும் 28-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவித்தார்.