டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது - பிரதமர் மோடி புகழாரம்!
10:32 AM Dec 06, 2024 IST
|
Murugesan M
டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு தலைவணங்குகிறோம்.
டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. ,அவரது பங்களிப்பை நினைவுகூறும்போது, அவருடைய பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Advertisement
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் உள்ள சைத்ய பூமிக்கு நான் சென்றிருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
Next Article