டாலருக்கு மாற்றாக வேறு கரன்சிகளை பயன்படுத்தினால் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய முடியாது - ட்ரம்ப் எச்சரிக்கை!
02:15 PM Dec 02, 2024 IST | Murugesan M
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சிகளை பயன்படுத்தினால் அமெரிக்காவில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாது என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலகளாவிய அந்நிய செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலர் தோராயமாக 58 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
Advertisement
இதனால் சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளை இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement