செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டிரம்ப குற்றவாளி, தண்டனை ஏதும் இன்றி விடுவிப்பு - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

11:41 AM Jan 11, 2025 IST | Murugesan M

நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவரை நிபந்தனை ஏதுமின்றி தண்டனையில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

Advertisement

டொனால்டு டிரம்ப் முதன் முறையாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டி அளித்தார்.

இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், பேட்டி தராமல் இருப்பதற்காக ஸ்டார்மிக்கு பணம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கில், டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதிபர் தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்; வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், டிரம்ப்பை நிபந்தனையின்றி விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Tags :
2016 US electionDonald TrumpFEATUREDMAINManhattan courtnew yorkpornographic actress Stormy Daniels
Advertisement
Next Article