செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார் உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

09:45 AM Dec 29, 2024 IST | Murugesan M

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.

Advertisement

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை 18 வயதான குகேஷ் பெற்றார்.

Advertisement

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை குகேஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுதுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது : " செஸ் சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான குகேஷ் உடன் எனக்கு சிறந்த தொடர்பு இருக்கிறது. நான் சில வருடங்களாக அவருடன் நெருக்கமாகப் பழகி வருகிறேன், அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது உறுதியும் அர்ப்பணிப்பும்தான்.

அவரது தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இளைய உலக செஸ் சாம்பியனாக வருவேன் என்று அவர் கூறிய ஒரு வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது சொந்த முயற்சிகளால் தற்போது  அந்த கணிப்பு நிறைவேறியுள்ளது" என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Advertisement
Tags :
delhiFEATUREDMAINprime minister modiWorld Chess Champion Kukesh
Advertisement
Next Article