For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தஞ்சை தமிழ் பல்கலைக்​கழக பணி நியமன விவகாரம் - விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு!

09:43 AM Nov 22, 2024 IST | Murugesan M
தஞ்சை தமிழ் பல்கலைக்​கழக பணி நியமன விவகாரம்   விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு

தஞ்சை தமிழ் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக திருவள்ளுவன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக்​காலம் டிசம்பர் 12-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ள நிலை​யில், தமிழக ஆளுநரால் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டார். 2017-18-ம் ஆண்டில் பல்கலைக்​கழகத்​தில் துணைவேந்​தராக பாஸ்​கரன் இருந்த​போது, பேராசிரியர், உதவிப் பேராசி​ரியர்கள் 40 பேர் பணி நியமனம் செய்​யப்​பட்​டனர்.

Advertisement

இந்த விவகாரத்தில் துணைவேந்தர் வழங்கிய விளக்​கத்​தில் திருப்தி இல்லை எனவும், இது தொடர்பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலுவை​யில் உள்ள​போது, முறை​கேடாக பணியில் சேர்ந்​தவர்​களுக்கு ஆதரவாக இருந்​த​தாக​வும் கூறி துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டுள்​ளார் என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி பிறப்​பித்த உத்தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் ஓய்வு​பெற்ற நீதிபதி எம்.ஜெயச்​சந்​திரன் தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டுள்ளது எனவும் அந்த உத்தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement