தனியார் பள்ளிகள் உதவியுடன் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும் விவகாரம் - பல்வேறு அமைப்புகள் கண்டனம்!
10:12 AM Jan 02, 2025 IST | Murugesan M
தமிழகத்தில் 500 அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளின் உதவியுடன் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பல்வேறு தனியார் பள்ளி சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் சென்னையில் அதன் தொடக்க விழா நடைபெற்றது.
Advertisement
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்ட இந்த விழாவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 500 அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் உதவி செய்யும் என்ற தீர்மானமும் அதில் இடம்பெற்றிருந்தது.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் மேம்படுத்தும் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement