செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் : இருவர் கைது!

06:50 PM Jan 23, 2025 IST | Murugesan M

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

சேலம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த கோகுல்நாத் என்பவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல வெள்ளாள குண்டத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி சென்றுள்ளார். சேலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வழிவிடுமாறு கூறியுள்ளனர்.

Advertisement

அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்தை மெதுவாக இயக்கியபடி பழைய பேருந்து நிலையத்திற்கு கோகுல்நாத் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர்.

இது குறித்து கோகுல்நாத் அளித்த புகாரின்பேரில் இருவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINPrivate bus driver attacked: Two arrested!selamtn ploice
Advertisement
Next Article