தமிழகத்தில் பிறப்பால் ஒரு முதல்வர் உருவாகக்கூடாது - விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா
2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் பிறப்பால் இனி ஒரு முதலமைச்சர் உருவாகக்கூடாது என்’றும், தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்து விட்டதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு ஒருபோதும் இடம் இல்லை என்றும் கூறினார்.
வேங்கைவயல் சம்பவத்தில் ஏன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஒரு சாதாரண காவலரால் கூட வேங்கைவயல் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறினார். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டதாகவும் ஆதவ் அர்ஜூனா கூறினார்.