தமிழக ஆளுநருடன் சட்டப்பேரவை தலைவர் சந்திப்பு!
02:49 PM Jan 03, 2025 IST | Murugesan M
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் அவை நடவடிக்கை தொடங்குவது வழக்கம். அந்த வகையில், சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அழைப்பு விடுத்தார்.
Advertisement
Advertisement