தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 11- ம் தேதி வரை நடைபெறும்! : சபாநாயகர் அறிவிப்பு
ஜனவரி 11ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
ஜனவரி 11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறிய சபாநாயகர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு 8ம் தேதி விவாதம் தொடங்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என தெரிவித்த சபாநாயகர், சனிக்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் பதிலுரை வழங்குவார் என தெரிவித்தார்.