தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி
தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 128-து பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று நேதாஜியின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரது உருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,
நேதாஜியின் தியாகம் அளவிட முடியாதது என புகழாரம் சூட்டினார். தமிழகத்திற்கும் நேதாஜிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் ஆனால் தமிழக பாடப் புத்தகங்களில் அவரது வரலாறு முழுமையாக இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள், சாதியை வைத்து மக்களிடையே பிரிவினையை உருவாக்கியதாக குற்றம்சாட்டிய ஆளுநர், இன்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் பஞ்சாயத்து தலைவராக முடிந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.