செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக வேலை வாய்ப்புக்காக எல்லையில் ஊடுருவும் வங்க தேச முஸ்லீம்கள் - அசாம் முதல்வர் தகவல்!

03:45 PM Jan 02, 2025 IST | Murugesan M

தமிழகத்தில் வேலை பெறுவதற்காகவே, எல்லையில் வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement

கவுகாத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித்துறை பணியாளர்கள் என தெரிவித்தார். வங்க தேசத்தில் நிலவும் அசாதாரண நிலையால் ஜவுளி துறை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் கவனம் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளதாகவும் கூறினார்.

தமிழக ஜவுளி துறையில் பணியில் பணியாற்றவே அசாம் எல்லைக்குள் அதிகளவில் ஊடுருவி வருவதாகவும்,  கடந்த 5 மாதங்களாக, தினமும் 20 முதல் 30 பேர் வரை அசாம் மற்றும் திரிபுரா எல்லையில் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

அவ்வாறு வருபவர்களை கைது செய்யாமல் , அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளோம் என்றும் அவ்ர தெரிவித்தார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் பேசியுள்ளதாக ஹிமந்த பிஸ்வா சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINTamil NaduHimanta Biswa SarmaAssam Chief Minister Himanta Biswa SarmaBangladeshi MuslimsBangladeshi Muslims crossing bordertextile workers.
Advertisement
Next Article