For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போராட்டத்திற்கு சென்ற தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது - அண்ணாமலை கண்டனம்!

11:40 AM Dec 26, 2024 IST | Murugesan M
போராட்டத்திற்கு சென்ற தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது    அண்ணாமலை கண்டனம்

சென்னையில் போராட்டத்திற்கு சென்ற தமிழிசை சௌந்தர ராஜன், உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்தற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், , மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

Advertisement

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும்.

இதற்கு முதலமைச்சர்  ஸ்டாலின்முழு பொறுப்பு. திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement