தமிழ்நாட்டு நலனுக்கு பிரதமர் மோடி பல உரிமைகளை பெற்று தந்துள்ளார் : கரு.நாகராஜன் பெருமிதம்!
07:50 PM Jan 23, 2025 IST
|
Murugesan M
டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை தொடர்ந்து சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்..
Advertisement
மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படவிருந்த டங்ஸ்டன் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தமிழக மக்களின் உணர்வை ஏற்று திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டு நலனுக்கு பிரதமர் மோடி பல உரிமைகளை பெற்று தந்துள்ளார் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
Next Article