தமிழ் மொழி குறித்து ஆவணப்படம் உருவாக்கும் அமெரிக்கர் - அண்ணாமலையுடன் தமிழில் பேசி அசத்தல்!
தமிழ் மொழியின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை விவரிக்கும் ஆவணப்படத்தை உருவாக்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த பிரையன் லைன்பாக் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது :
இன்று பாஜக அலுவலகத்தில் பிரையன் லைன்பாக்கை சந்தித்த பிறகு நான் ஈர்க்கப்பட்டேன். பிரையன் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், அவர் 19 வயதில் இருந்தே தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருந்தார், மேலும் மதுரையில் உள்ள தமிழ் பேராசிரியரிடம் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு அதைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட பிரையன், தமிழ் மொழியின் அருமையை உலகுக்குத் தெரியப்படுத்துவதில் ஆர்வம் கொண்டு தமிழ் மொழியின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை விவரிக்கும் ஆவணப்படத்தை உருவாக்கி வருகிறார்.
பிரையனின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.