தரமற்ற ஹெல்மெட் விற்பனை - கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
தரமமற்ற ஹெல்மெட்களை விற்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை குறிவைத்து நாடு தழுவிய பிரச்சாரம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் நலத்துறை எழுதிய கடிதத்தில், BIS தரச்சான்றிதழ் இல்லாத தரமற்ற ஹெல்மெட்டுகள் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொது பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், BIS உரிமம் இல்லாமல் செயல்படும் ஹெல்மெட் உற்பத்தியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், BIS தரச்சான்றிதழ் பெற்றுள்ளனரா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சரி பார்ப்பதுடன் உரிமம் பெறாத உற்பத்தியாளர்களுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் செய்யுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.