தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை - திருமாவளவன்
10:01 AM Dec 07, 2024 IST | Murugesan M
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை என்றும், அவ்வாறு எந்த அழுத்தமும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவிற்கு தானோ, விடுதலை சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை என்றும், விழாவில் பங்கேற்காததற்கு விஜய் காரணமில்லை என்றும் அவர் கூறினார்.
Advertisement
விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லை என்றும் அதேவேளையில் திமுக கூட்டணியில் விசிக நீடிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement