திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாய துறை சார்ந்த மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர்.
செங்கரும்பு கட்டப்பட்ட செம்மண் மைதானத்தில் மங்கல இசையுடன் துறை பேராசிரியருடன் இணைந்து மாணவிகள் நடனமாடினர். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
முன்னதாக பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பசுக்களுக்கு பூஜை செய்து பொங்கல் ஊட்டி, பழங்கள் கொடுத்து விழாவை துவக்கி வைத்தார்.
இதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் வீராணம் அடுத்துள்ள வழையக்காரனூர் பகுதியில் தனியார் கல்லூரி மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடினர். முன்னதாக கிராமம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தூய்மைப் பணி செய்தனர்.
அதனை தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து குலவை இட்டு பொங்கல் விழா கொண்டாடினர். தொடர்ந்து கிராமிய பாடலுக்கு நடனமாடி மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.