திண்டுக்கல் மேற்கு, நாகை மாவட்ட பாஜக தலைவர்கள் பதவியேற்பு!
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயராமன், முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
Advertisement
இதனையொட்டி, கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மாவட்ட தலைவர் ஜெயராமனுக்கு, முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, மாவட்ட அலுவலக வளாகத்தில் பாஜக கொடியை ஜெயராமன் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.
நாகை மாவட்ட பாஜக தலைவர் பதவியேற்பு விழா, தொண்டர்கள் கரகோஷத்துக்கு மத்தியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், புதிய மாவட்டத் தலைவராக விஜயேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் தங்க வரதராஜன் மற்றும் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.