For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! : நடிகை கஸ்தூரி

05:29 PM Dec 16, 2024 IST | Murugesan M
திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்    நடிகை கஸ்தூரி

இளையராஜாவை கருவறைக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன்  என்றும் அவர் கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவே இல்லை  என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் நடிகை கஸ்தூரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி,

இன்று முதல்முறையாக கமலாலய வாசலில் அடி எடுத்து வைத்துள்ளேன். நவம்பர் மாதம் நடந்த சர்ச்சையின் போது அண்ணாமலை லண்டனில் இருந்தார். அப்பொழுது அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் எனக்கு நிறைய தைரியம் கொடுத்து அறிவுரை கூறினார். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி அவர் கூறினார். அவர் எப்பொழுதும் எனக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார்.

Advertisement

தனக்கு நடந்த சோகமான காலகட்டத்தில் பக்கபலமாக இருந்ததற்காகவும் லண்டனில் இருந்து வந்து அவருக்கு  எனது நன்றியையும் வாழ்த்தும் தெரிவித்தேன்.

இரண்டு பேரும் முக்கியமான விஷயங்களை விவாதித்தோம். அந்த விவாதம் இன்னும் முற்றுப் பெறவில்லை. முழுமையாக விவாதித்து முடித்த பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிலான செய்தியை சொல்வோம்.

தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை அகற்றி, புதிய காற்று வீச வேண்டுமானால் அதற்கு எல்லோரும் ஒருமித்த கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது என் கருத்து.

தற்போது என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது அதைப்பற்றி தான் பேசினோம். கொஞ்சம் அரசியலையும் பேசியுள்ளோம். முழு அரசியலையும் பேசி முடித்துவிட்டு தெரிவிக்கிறோம்.

இளையராஜா என்பவர் ஒரு இசை கடவுள். அவரை கோயிலுக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன், இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இந்த நாட்டில் ஏமாற்றுவார்கள்.

கருவறைக்குள் எந்த ஜாதியினரும் செல்ல முடியாது. பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும்தான் செல்ல முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். அர்ச்சகர்கள் எந்த ஜாதினராக இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியும் இதைத் திரித்து பேசுகிறார்கள்.

இளையராஜா கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவே இல்லை உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் இங்கே நில்லுங்கள் என்று சொல்கிறார்கள். அவரும் அங்கே நிற்கிறார், இதுதான் நடந்தது எனத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement