திமுகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் - நடிகை கஸ்தூரி கருத்து!
திமுகவை வீழ்த்த சீமான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
விசிகவில் திருமாவளவன் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜூனா இருக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளதாகவும் கூறினார்.
தரக்குறைவாக பேசுவது உதயநிதிக்கு ஒன்றும் புதிதல்ல எனவும் அவர் விமர்சித்தார். ஒரு கட்சி கூட்டணிக்கு எதிராக, மற்ற அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடிக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும் எனவும் கஸ்தூரி தெரிவித்தார்.