திமுக ஒன்றிய செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டிய வீடியோ!
தென்காசி ஊராட்சி ஒன்றிய தலைவரை திமுக ஒன்றிய செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக திமுக ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ள ஷேக் அப்துல்லாவை மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, டி.ஆர்.டி.ஏ நிதி மூலம் தார் சாலைகள் அமைக்கும் திட்டத்திற்குரிய கமிஷன் தொகையான 7 லட்சம் ரூபாய் எங்கே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
"தனது வார்டுக்கு சம்பந்தமில்லாத பகுதிகளான ஆயிரப்பேரி, பாட்டப்பத்து உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் செய்த பணிகளுக்கு உரிய தொகை என்னாச்சு? நாங்க என்ன பிச்சையா எடுக்கிறோம், உரிமையதான கேட்கிறோம்" என்பது போல கமிஷன் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.