செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தியாகராஜர் ஆராதனை விழா - பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி!

12:21 PM Jan 18, 2025 IST | Sivasubramanian P

தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி காவிரி கரையில் ஆயிரம் கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே ராகத்தில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவேரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் சமாதியில் ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழா நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தியாகராஜரின் 178வது ஆராதனை விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.

தியாகராஜர் சிலைக்கு நாள்தோறும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்ட நிலையில், தியாகராஜர் வாழ்ந்து மறைந்த அவரது இல்லத்தில் இருந்து உஞ்ச விருத்தி நடைபெற்றது. இதில் அவரது சிலைகளை எடுத்து கொண்டு பஜனை பாடல்கள் பாடியவாறு பக்தர்கள் வீதி உலா சென்றனர்.

Advertisement

தியாகராஜர் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை காவிரி கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், தியாகராஜரின் முத்தான ஐந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆயிரக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் - ஒரே நேரத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல பாடகர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, OS.அருண், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
Tags :
annual music festival of thyagarajaFEATUREDMAINsaint thyagaraja aradhana concertthiruvaiyaru thyagaraja aradhanathiyagarajar aradhanathyagarajathyagaraja aradhanathyagaraja aradhana 2025thyagaraja aradhana endaro mahanubhavuluthyagaraja aradhanaithyagaraja swamy aradhanatyagaraja aradhana
Advertisement
Next Article