திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த தேவையில்லை - அண்ணாமலை கருத்து!
03:21 PM Dec 06, 2024 IST
|
Murugesan M
நாம் தமிழர் கட்சி குறித்து வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த வேண்டாம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎஸ் பயிற்சியின்போது வருண்குமார் எனது பேட்ஜ் மேட் என தெரிவித்தார்.
வருண் குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் தெரிவித்த அதனை சீமான பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் கூறினார்.காவல்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்; காவல்துறையின் கைகளை கட்டிப்போடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தின் முக்கிய தலைவர் என்றும் அண்ணாமலை கூறினார்.
Advertisement
Next Article