திருச்செந்தூர் கோவில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை : விஞ்ஞானி ராமநாதன் பேட்டி
இயற்கை சார்ந்த தடுப்புகளை அமைக்க திட்டமிடப்படும் என தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Advertisement
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு தொடர்பாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர், அய்யா வைகுண்டர் கோயில் அருகே கடற்கரை பகுதியில் போடப்பட்டுள்ள கற்கள், தூண்டில் பாலங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன்,
இயற்கைக்கு மாறாக கடலில் மாற்றங்கள் நடக்கும்போது கடல் அரிப்பு ஏற்படுவது இயல்பு என கூறினார். கடற்கரையின் ஆழம், அதன் கனம் என்ன என்பதை ட்ரோன் கேமரா ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
மேலும், இயற்கை சார்ந்த தடுப்புகளை அமைக்க திட்டமிடப்படும் என்றும், இயற்கைக்கு எதிராக நாம் செயல்படுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.