திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுர மணி புதுப்பிப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு கோபுர மணி புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின், வரும் ஜூலை மாதம் மகா குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் ஒலித்த கோபுர மணி மீண்டும் ஒலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல நூறு ஆண்டுகளுக்கு பின் கோபுரமணி ஒலிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க கல்மண்டபங்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.