திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் :கோபுர திருப்பணி களுக்கு பாலாலயம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர திருப்பணிகளுக்கான பாலாலயம் நடைபெற்றது.
Advertisement
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி காணொலி வாயிலாக பெருந்திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 7ஆம் தேதி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறநிலையத்துறை அறிவித்துள்ள நிலையில், கோபுர திருப்பணிகளுக்கான பாலாலயம் நடைபெற்றது. அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, 17 கும்ப கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அறநிலையத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.